வணக்கம்
பணவீக்கம் மேலும் உயர்வதை தடுக்க ஆர்பிஐ ரேபோ மற்றும் ரிவேர்ஸ் ரேபோ சதவிகிதத்தை மாற்றி உள்ளதை சந்தையின் குறுகிய கால முதலீட்டாளர்கள் விரும்ப மாட்டார்கள். ஆகவே சந்தை திங்கள் கிழமை சந்தை கீழே இறங்க வாய்ப்புள்ளது. இதை வாய்ப்பாக பயன் படுத்தி முன்னணி பங்குகளை நீண்ட கால முதலீடாக வாங்க நாங்கள் பரிந்துரை செய்கிறோம். அரசுடமை ஆக்கப்பட்ட வங்கி பங்குகள் வாங்குவதற்கு ஏற்றவை. இந்த ரேபோ மற்றும் ரிவர்ஸ் ரேபோ ஏற்றம் குறுகிய கால முதலீடாளர்களுக்கு பாதகம் என்பதால் அவர்கள் விற்கவே முயல்வார்கள். வட்டி விகித உயர்வால் ரியல்எஸ்டேட் பங்குகளுக்கு பாதகம் என்பதால் முதலில் அவை இறங்கும். மற்றும் அதிக கடன் சுமை உள்ள பங்குகளும் இறங்க கூடும். மேலும் இதே அளவு ஆர்பிஐ குறுக்கீடு ஏப்ரல் மாத்திலும் இருக்ககூடும் என்று சந்தை வல்லுனர்கள் கணிப்பதால் இனி பங்கு குறியீடு குறுகிய காலத்துக்கு ஏற வைப்பு குறைவாகவே உள்ளதால் சந்தையில் பணம் முதலீடு செய்பவர்கள் ஒரே நேரத்தில் செய்யாமல் சிறிது சிறிதாக முதலீடை கூட்டலாம். ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு பெரிய அளவு பாதகம் இல்லை என்று சொல்லபட்டாலும் முதலில் இந்த பங்குகள் இறங்கி பிறகு ஏறக்கூடும்.
இனி சந்தை வரும் நான்காவது காலாண்டு முடிவுகளை எதிர்நோக்கி இருக்கும் தருணத்தில் இந்த ஆர்பிஐ குறுக்கீடும் சேர்ந்து வருவதால் சிறிது பதட்டம் வரக்கூடும். மேலும் வரும் ஆண்டு பருவமழை எதிர்பார்த்த அளவு இருக்கும் என்றே கணிக்கப்பட்டுள்ளது. ஆகவே நீண்டகால முதலீட்டாளர்கள் , சந்தை மீண்டும் இறங்கும் நேரத்தில் முதலீடு செய்ய நாங்கள் பரிந்துரை செய்கின்றோம்.
ஏதாவது பங்குகள் பற்றி அறிய அழைக்க வேண்டிய தொலைபேசி எண்கள்
044 24990277 மற்றும் 24991173 . கைபேசி 9841642420